நெல்லை மாவட்டம், வள்ளியூரில் பசுமை இயக்கம் சார்பில் உலக சிட்டு குருவி தினம் கொண்டாடப்பட்டது. 9-வது ஆண்டாக பொதுமக்களுக்கு இலவசமாக 200 சிட்டுக்குருவி கூடு வழங்கப்பட்டது.
அழிந்து வரும் சிட்டு குருவிகளை பாதுகாக்கு விதமாகவும், சிட்டு குருவிகளினால் மனித இனத்திற்கு என்ன நன்மைகள் என்பது குறித்தும் , விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மரங்கள் வளர்ப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்து விதமாக, 9-வது ஆண்டாக பொதுமக்களுக்கு இலவசமாக சிட்டுக்குருவி கூடுகள்
வழங்கப்பட்டன.
நிகழ்வில், வள்ளியூர் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் யோகேஷ்குமார் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு இலவசமாக 200 சீட்டுக்குருவி கூடுகளை வழங்கினார். இந்த நிகழ்வில், பசுமை இயக்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
—கு.பாலமுருகன்







