’நடிகர் விஜய் பற்றி ஒரே வார்த்தை’ – ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா

நடிகர் விஜய் பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்ட ரசிகரின் கேள்விக்கு நடிகை ராஷ்மிக மந்தனா சுவாரசியமாக பதிலளித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா 2016ம் ஆண்டு கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு…

நடிகர் விஜய் பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்ட ரசிகரின் கேள்விக்கு நடிகை ராஷ்மிக மந்தனா சுவாரசியமாக பதிலளித்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016ம் ஆண்டு கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு கன்னடம், தெலுங்கு, தமிழ் என தென் இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்துக்குப் பிறகு வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்ததுடன் விஜய் – ராஷ்மிகா இணைந்து ஆடிய நடனம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை அளித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஹாய் என்னுடைய அன்பானவர்களே! உங்களுடைய ட்வீட் அனைத்தையும் படிக்கிறேன். உங்களிடம் இருந்து அன்பால் என் இதயம் நிறைந்து விட்டது. இன்று கொஞ்ச நேரம் சாட் செய்யலாம்” என்று பதிவிட்டிருந்தார். உடனே அவரது ரசிகர்கள் கேள்விகளை கேட்கத் தொடங்கினர்.

https://twitter.com/iamRashmika/status/1637755387427553280?s=20

ஒரு ரசிகர் விஜய் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, ‘அன்பு’ என்று ஒரே வார்த்தையில் ராஷ்மிகா பதிலளித்துள்ளார். மேலும் தமிழில் அடுத்தப்படம் எப்போது என்று கேட்டதற்கு, படம் வெளிவந்து இரண்டு மாதங்கள் தானே ஆகிறது. ஏதாவது இருந்தால் கண்டிப்பாக உடனே சொல்லிவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். நெகட்டிவிட்டியை கொடுக்கும் மக்களை சமாளிப்பதற்கு டிப்ஸ் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, அவர்களுக்கு அதிக அன்பை கொடுங்கள்  என்று பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.