கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் உலக சிட்டுகுருவிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம்
சார்பில் உலக சிட்டுகுருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. மேலும, கோவில்பட்டி கிழக்கு
காவல் நிலையத்தில் , காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையிலான காவலர்கள் , மண் சட்டிகளில் தண்ணீர் மற்றும் சோளம் , கம்பு உள்ளிட்ட சிறுதானிய உணவுப் பொருள்களை வைத்தும் சிட்டுக்குருவிகள் தினத்தை கடைபிடித்தனர்.
இதனை போலவே, கோவில்பட்டி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில், சிட்டுக்குருவிகளுக்கு சிறுதானிய உணவுப் பொருட்கள் வைப்பதாகவும், அவற்றை பாதுகாக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர் .
—கு.பாலமுருகன்







