உலக அகதிகள் தினம் : போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக அகதிகள் தினம் ஆண்டுதோறும் ஜூன் 20-ம் தேதி நினைவுகூரப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் உலக அகதிகள் தினமான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்! மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம்!

நமது திராவிடமாடலில் “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம்!
போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.