முக்கியச் செய்திகள் தமிழகம்

உலக கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி; அர்ஜென்டினா-குரோஷியா இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி இன்று அரைஇறுதியில் குரோஷியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

முதல் அரையிறுதி

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று, கால்இறுதி முடிவில் இப்போது அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன. லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதுகிறது.

அர்ஜென்டினா

உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினா லீக் சுற்றில் தொடக்கத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. அதன் பிறகு மெக்சிகோ, போலந்தை தோற்கடித்து நாக்-அவுட் சுற்றை எட்டிய அர்ஜென்டினா 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவை விரட்டியது. வாக்குவாதம், மோதல், நடுவரின் இடைவிடாது எச்சரிக்கை என்று அனல் பறந்த கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

குரோஷியா

12-ம் நிலை அணியான குரோஷியா நடப்பு தொடரில் தோல்வியே சந்தித்தது இல்லை. லீக் சுற்றில் ஒரு வெற்றி, 2 டிரா வுடன் 2-வது இடத்தை பிடித்த அந்த அணி 2-வது சுற்றில் ஜப்பானையும், கால்இறுதியில் ‘நம்பர் ஒன்’ அணியான பிரேசிலையும் போட்டுத் தாக்கியது. கடந்த உலகக் கோப்பையில் இறுதி சுற்றில் தோல்வியை தழுவிய குரோஷியா இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை.

வெல்லப்போவது யார்?

இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் களத்தில் சூடுதெறிக்கும் என்று நம்பப்படுகிறது. புகழ்பெற்ற லயோனல் மெஸ்சிக்கு உலகக் கோப்பை கனவு நிறைவேற இதுவே கடைசி வாய்ப்பாகும். ஏற்கனவே நட்சத்திர வீரர்கள் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரேசிலின் நெய்மார் தோல்வியை தழுவினர்.

1978, 1986-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா அரைஇறுதியில் ஒரு போதும் வீழ்ந்ததில்லை. அந்த பெருமையோடு 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்கும் உத்வேகத்துடன் வியூகங்களை தீட்டி வருகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாதுகாப்பு அச்சுறுத்தல்: நியூசிலாந்து – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் திடீர் ரத்து

EZHILARASAN D

OBC சாதிச்சான்றிதழ்; தமிழ்நாடு அரசு அதிரடி

G SaravanaKumar

இந்தியாவில் தங்கத்தின் தேவை 19% அதிகரிப்பு

Gayathri Venkatesan