கனமழை காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதன்படி இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சை போன்ற மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுக்தா அணையில் இருந்து வினாடிக்கு 9000 கன அடி நீர் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.







