33.9 C
Chennai
September 26, 2023
முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : அறிமுக போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நிஸ்செல்!

பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை நிஸ்செல் அறிமுக போட்டியில் வெள்ளி வென்றார்.

பிரேசில் நாட்டின் ரியோ டிஜெனீரோவில் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை நிஸ்செல் பங்கேற்றார். அபாரமாக தனது திறமையை வெள்ளிப்படுத்திய அவர் 458 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தான் பங்கேற்ற முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே பதக்கம் வென்று இருப்பதுடன் தகுதிச்சுற்றில் 592 புள்ளிகள் குவித்ததன் மூலம் சக வீராங்கனை அஞ்சும் மோட்ஜிலின் (591 புள்ளி) தேசிய சாதனையையும் முறியடித்துள்ளார்.
நார்வே வீராங்கனை ஜியானெட்டி ஹிக் டஸ்டாட் 461.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற 16 பேர் கொண்ட இந்திய அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளியுடன் பதக்கப்பட்டியலில் 7-வது இடம் பெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

வாரத்தின் தொடக்கத்தில் மேலும் இரண்டு இந்தியர்கள் மிகக் குறுகிய வித்தியாசத்தில் இறுதிப் போட்டிக்கு வருவதைத் தவறவிட்டனர். நடப்பு ஆசிய விளையாட்டு சாம்பியனான ராஹி சர்னோபட், 10-ரிங்கில் குறைவான ஷாட்களை அடித்ததன் காரணமாக, பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் இறுதிப் போட்டியை தவறவிட்டார்.

செப்டம்பர் 18 ஆம் தேதி நடைபெற்ற  மற்றொரு அனுபவமிக்க இந்திய துப்பாக்கி சுடுதல் வீரரான செயின் சிங், ஆடவர் இறுதிப் போட்டியை ஒரு புள்ளி வித்தியாசத்தில் தவறவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற நோயாளி

Janani

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 50-ஆம் ஆண்டு நிறைவு திருவிழா! கோலாகலமாக நடைபெற்ற கொடியேற்ற விழா!

Web Editor

கைகளில் பானையுடன் பிச்சை கேட்டு நூதன முறையில் போராடிய தூய்மை பணியாளர்கள் !

Jeba Arul Robinson