முக்கியச் செய்திகள் விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனியை ஆடவிட்டு அடித்த ஜப்பான், 2-1 கோல் கணக்கில் வெற்றி

இன்று நடை பெற்ற பரபரப்பான ஆட்டத்தில் பலரையும் வியக்க வைக்கும் வகையில் ஜெர்மனி 1க்கு2 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோற்றது.

22வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்றில் நேற்று 4 ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி அமெரிக்கா, வேல்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்ததால், ஆட்டம் சமனில் முடிந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இன்றும் லீக் சுற்றில் 4 போட்டிகள் நடைபெறுகின்றன. அதன்படி இன்று பிரான்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. அதில் அபாரமாக விளையாடிய பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதன் பின் நடைபெற்ற குரோஷிய -மொராகோ அணிகள் விளையாடிய ஆட்டம் 0-0 என சம்னில் முடிந்தது.

அதனைத் தொடர்ந்து FIFA உலகக்கோப்பை தொடரில் குரூப் E பிரிவில், தரவரிசை பட்டியலில் 11வது இடத்தில் உள்ள ஜெர்மனி அணி மற்றும் 24வது இடத்தில் உள்ள ஜப்பான் அணியும் அணியும் பலப்பரிட்ச்சை செய்தன. இந்த பரபரப்பான ஆட்டத்தில் பலரையும் வியக்க வைக்கும் வகையில் ஜெர்மனி 1க்கு2 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோற்றது.

அட்டத்தின் தொடக்கம் முதலே ஜெர்மனி , ஜப்பான் மோதிய இந்த ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இப்படி இருக்க ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய ஜெர்மனி கோல் அடித்து அசத்தியது.

இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் ஜெர்மனி 1க்கு0 என்ற கோல் கணக்கில் முன்டினலையில் இருந்தது. பின் ஆட்டத்தின் 2வது பாதியில், ஜெர்மனியின் கோலை சமன் செய்ய ஜப்பான் அணியினர் ஆவேசமாக விளையாடினர். மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜப்பான் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து முன்னிலை வகுத்தது.

போட்டியின் 90 நிமிடங்கள் முடிந்தும், கூடுதல் நேரத்திற்கு ஆட்டம் செல்லவே ஜெர்மனி கோலை சமன் செய்ய போராடியது. ஆனால் ஜெர்மனியால் கோல் ஏதும் அடிக்க முடியாததால் ஜப்பான் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சவுதியிடம் அர்ஜென்டினா தோற்ற நிலையில், இன்று ஜெர்மனி அணி, ஜப்பானிடம் வீழ்ந்தது உலகக் கோப்பை கால்பந்து தொடரை சூடுபிடிக்க செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தம்பிக்கு எனது வாழ்வையே தருவேன்; பிரியங்கா காந்தி

G SaravanaKumar

சென்னையில் 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள்: மாநகராட்சி அறிவிப்பு

EZHILARASAN D

காற்று மாசு; பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Halley Karthik