முக்கியச் செய்திகள் சினிமா

தமிழ் படங்களுக்கு நெருக்கடி; பிற மொழி நிறுவனங்கள் பின்னால் பெரிய அரசியல் -விஷ்ணு விஷால்

தமிழ் படங்களை வெளியிடுவதில் பிற மொழி நிறுவனங்கள் நெருக்கடிகளைக் கொடுப்பதுக்குப் பின்னால் பெரிய அரசியல் இருக்கலாம் என கருதுகிறேன் என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள கட்டா குஸ்தி திரைப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை விளம்பரப்படுத்துவது தொடர்பாகப் படக்குழுவினர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் விஷ்ணு விஷால், ஆணும் பெண்ணும் சமம் மற்றும் கணவன் மனைவி இடையே நிகழும் கருத்து வேறுபாடுகள் தொடர்பாக இந்த படத்தில் பேசப்பட்டிருக்கும். இந்த திரைப்படத்தில் இரண்டு சர்பரைஸ் இருக்கும் என தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து பேசிய அவர், கோவிட்க்கு பிறகு அனைவரும் உலக சினிமா பார்க்க ஆரம்பித்துவிட்டனர். எனவும் தென்னிந்தியப் படங்கள் தற்போது ஹாலிவுட் படங்களை விட அதிக அளவில் வட இந்தியாவில் பேசப்படுகிறது. திரைப்படங்களில் மக்கள் தற்போது அதிக அளவில் கதையை எதிர்பார்ப்பதோடு அதில் சிறிய வித்தியாசத்தையும் எதிர்பார்க்கிறார்கள் என கூறினார்.

மேலும், திரைப்படங்களின் மீதான மக்கள் பார்வையும் எதிர்பார்ப்புகளும் அறிவுப்பூர்வமாக வளர்ந்துள்ளன. தமிழ்ப் படங்களை வெளியிடுவதில் பிற மொழி நிறுவனங்கள் நெருக்கடிகளைக் கொடுப்பதுக்குப் பின்னால் பெரிய அரசியல் இருப்பதாகக் கருதுகிறேன். மூன்று வாரங்களுக்கு முன் தான் இந்த படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டது. தனுஷின் வாதி படம் தள்ளிப்போனதால் தற்போது தனது படத்தை வெளியிடுகிறேன் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாற்றுத்திறனாளியை பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்ட நடத்துனர் சஸ்பெண்ட்

EZHILARASAN D

கீழடியில் அருங்காட்சியகம் எப்போது திறக்கப்படும்?

Web Editor

தமிழ்நாட்டில் அமைகிறது இந்தியாவின் முதல் கடல்பசு பாதுகாப்பகம்

EZHILARASAN D