நாடு முழுவதும் முக்கிய நகரங்களிலும் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.
உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 15) கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் இன்று வண்ணமயமாகவும் வெகு விமர்சையாகவும் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தலைநகர் டெல்லியில் ஒமிக்ரான் பரவலைக் கருத்தில் கொண்டு, கிறிஸ்துமஸ் வழிபாடுகளில் பொதுமக்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கோல் மார்கெட், பகுதியிலுள்ள திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்து பிறப்பு தின வழிபாடுகள் நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு செயின்ட் பிரான்சிஸ் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பெங்களூரு பகுதியை சேர்ந்த கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
கோவா மாநிலத்தின் தலைநகர் பானாஜி இமாகுலேட் தேவாலயத்தில் சிறப்புக் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள செயின்ட் தெரசா தேவாலயத்தில் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு, இயேசு கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.