ஒமிக்ரான் பரவல் அச்சம் காரணமாக சீனாவில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது. இரண்டு ஆண்டுகளாக ஆட்டம் காட்டிய கொரோனா தொற்று சற்று தணிந்த நிலையில் கொரோனாவின் மற்றொரு மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் தற்போது தலை தூக்கியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவின் மற்றொரு வகையான ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், ஒமிக்ரான் அச்சம் காரணமாக சீனாவில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பரிசோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.








