“பல மாவட்டங்களில் பணிகள் துரிதம்” – கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் 3 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளுடன்…

அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் 3 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

அப்போது பேசிய அவர், அறிவித்த நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டங்களுக்கு செலவிடுவதுதான் திறம்பட்ட நிர்வாகமாகும் என்றும், மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், பாராட்டை பெறும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் எனவும் கூறினார். முதலமைச்சர் எப்போது வருவார் என எண்ணி பல மாவட்டங்களில் பணிகள் துரிதமாக நடைபெறுகிறது என கூறிய அவர், அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள் : ஏடிஎம்-ஐ கொள்ளையடிப்பது எப்படி? – 3 மாதங்கள் பாடம் நடத்திய ’ஏடிஎம் பாபா’

முன்னதாக, விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பான முறையில் சமூக சேவையாற்றிய கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த சமூக சேவகர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.