சதுரகிரியில் வனத்துறையை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் கடை வைக்க அனுமதி கோரி – தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வனத்துறையை கண்டித்து போராட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குதொடர்ச்சி…

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி கோயிலுக்கு
செல்லும் வழியில் கடை வைக்க அனுமதி கோரி – தொழிலாளர்கள் 50-க்கும்
மேற்பட்டோர் வனத்துறையை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில்,
பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த
கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்கள்
மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும், ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழாவெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டிற்கான திருவிழா வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாளை
முதல் வரும் 17ஆம் தேதி வரை மொத்தம் ஆறு நாட்கள் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள்
செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சதுரகிரி கோவிலுக்கு செல்லும்
வழி மலைப் பாதையில், கடை வைக்க அனுமதி வழங்க கோரி தொழிலாளர்கள் கோரினர்.

வனத்துறை சார்பாக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு, அடையாள அட்டை
வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
சுமை தூக்கும் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தாணிப்பாறை அடிவார
பகுதியில், வனத்துறை கேட் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில்
ஈடுபட்டனர்.

கு. பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.