முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக்: டைட்டில் ஸ்பான்சர்ஷிப் பெற்ற டாடா நிறுவனம்!

இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை கடந்த ஆண்டு டாடா நிறுவனம் பெற்றது. இதனிடையே, கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் போன்று வீராங்கனைகளுக்கு மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு தொடங்க உள்ளது. மார்ச் 4-ம் தேதி மகளிர் பிரீமியர் லிக் தொடங்க உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும் : நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி!

இந்த டி20 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. 5 அணிகளும் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கிரிக்கெட் தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் 951 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.

 

இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனம் வென்றுள்ளதாக தகவல் வெளியானது. உரிமத்திற்கான தொகை குறித்த தகவல் வெளியாகாத நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா குழுமம் பெற்றுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL) டைட்டில் ஸ்பான்சராக டாடா குழுமத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் ஆதரவுடன், மகளிர் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது ” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்; வருத்தம் தெரிவித்த விக்ரம்!

Arivazhagan Chinnasamy

தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்படுமா?-அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

G SaravanaKumar

1980 முதல் 2023 வரை அமெரிக்காவில் வங்கிகள் சரிவடைந்த வரலாறு

Web Editor