விசிக தலைவர் தொல்.திருமாவளவனுடன், காயத்ரி ரகுராம் சந்தித்துள்ளார். இதன் காரணமாக காயத்ரி ரகுராம் விசிகவில் இணைகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
நடிகையாகவும், நடன இயக்குநராகவும் பிரபலமடைந்தவர் காயத்ரி ரகுராம். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக கூறி பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: மகளிர் பிரீமியர் லீக்: டைட்டில் ஸ்பான்சர்ஷிப் பெற்ற டாடா நிறுவனம்!
அண்மையில் அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து விசிக, திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்தால் சேருவது குறித்து பரிசீலனை செய்வேன் என தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் தான் திடீரென்று காயத்ரி ரகுராம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளனை சந்தித்துள்ளார். சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு காயத்ரி ரகுராம் சென்றார். அங்கு அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்தார். புத்தகம் வழங்கி அவரை தொல் திருமாவளவன் வரவேற்றார். இந்த சந்திப்பு சிறிது நேரம் நடந்தது. அதன்பிறகு அங்கிருந்து காயத்ரி ரகுராம் புறப்பட்டு சென்றார். இதன் காரணமாக காயத்ரி ரகுராம் விசிகவில் இணைகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது 🙏
வி.சி.க. தலைவர், எம்.பி., அண்ணா திரு.தொல் திருமாவளவன் அவர்களுக்கும், வி.சி.க.வுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி.மாரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு 🙏
.@thirumaofficial pic.twitter.com/3dDB01sxGF
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) February 21, 2023
மேலும் இந்த சந்திப்பு குறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், ‛‛எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது விசிக தலைவர், தொல் திருமாவளவன் எம்பி, விசிகவுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு” என தெரிவித்துள்ளார்.
இதேபோல், திருமாவளவனும் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛காயத்ரி ரகுராம் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்தார்” என போட்டோவுடன் பதிவு செய்துள்ளார்.