விழுப்புரத்தில் சாலாமேடு குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கை அகற்ற கோரி அப்பகுதி பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நகர் பகுதியான சாலாமேட்டில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் சுற்றி பேருந்து நிறுத்தம், குடியிருப்பு பகுதிகளும் உள்ளது. மேலும் அப்பகுதியிலுள்ள பெண்களிடம் மது அருந்துவோர்கள் தவறாக பேசுவது, போதையில் வழிமறித்து படுத்து கிடப்பது, கல்லுாரி மாணவிகளிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவது என பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதனால் அப்பகுதி பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து இன்று டாஸ்மாக் கடையை அப்பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என விழுப்புரம் ஆட்சியர் அலுவலத்தில் தங்கள் குழந்தைகளுடன் பெண்கள் வந்து மனு அளித்தனர். டாஸ்மாக்கை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அனகா காளமேகன்






