31.7 C
Chennai
September 23, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

தொடரும் வடகலை தென்கலை சர்ச்சை… மீண்டும் மோதலில் ஈடுபட்ட இரு பிரிவினர்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதர் வரதராஜப் பெருமாள் கோயிலில், காலையிலும் மாலையிலும் யார் பிரபந்தங்களைப் பாடுவது என்பதில் அந்தக் கோயிலோடு
தொடர்புடைய வடகலை பிரிவினருக்கும் தென்கலை பிரிவினர்களுக்கும் பல
ஆண்டுகளாக மோதல் உள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாக உச்சகட்ட மோதலாக உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தென்கலை பிரிவினரை எடுத்துக் கொண்டால் , பிரபந்தங்களைத் துவங்குவதற்கு முன்பாக, மணவாள மாமுனிகளை போற்றும் “ஸ்ரீ சைலேஷ தயாபாத்திரம்” என்ற மந்திரத்தைச் சொல்லி துவங்குவார்கள். வடகலை வைணவர்களைப் பொறுத்தவரை, “ஸ்ரீ ராமானுஜ தயாபாத்திரம்” என்ற மந்திரத்தைச் சொல்லித் துவங்குவார்கள். இதற்குப் பிறகு இரு தரப்புமே பொதுவான பிரபந்தங்களைப் பாடுவார்கள். இதனை முடிக்கும்போது, தென்கலையார் “மணவாள மாமுனிகளே இன்னும் ஒரு நூற்றாண்டிலும்” என்ற வாழித் திருநாமத்தைச் சொல்லி முடிப்பார்கள். அதேபோல வடகலையார் தங்களுக்கென ஒரு வாழித் திருநாமப்பாடலை வைத்துள்ளனர்.

இருவரும் வைணவர்கள். இருவரும் ஒரே கடவுளை வணங்குபவர்கள் என்றாலுமே இரு தரப்புக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.

கடந்தாண்டு நடவாவி கிணறு உற்சவத்தின் போது நடைபெற்ற மோதல், இந்த
ஆண்டு வைகாசி பிரம்மோற்சவத்தின் பொழுது நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு வைகாசி பிரம்மோற்சவம் விழாவானது மே மாதம் 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த நிலையில் மூன்றாம் நாளான 2ஆம் தேதி காலை கருட சேவை உற்சவம் , அதனை தொடர்ந்து இரவு ஹானுமந்த வாகன உற்சவமும் நடைபெற்றது. மழையின் காரணமாக திருக்கோயிலிருந்து சுமார் 8 மணிக்கு மேல் வீதியுலா நடைபெற்றது.

திருக்கோயிலிருந்து வடகலை பிரிவினரின் வேத பாராயணங்கள் முழங்க வந்து சங்கரமடம் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில், மண்டகபடியாக கண்டருளி பட்டாட்சாரியர்களின் வேத பாராயணங்களும் பாடப்பட்டது . அப்போது வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையே வேத பாராயணம் பாடிய போது சிறு சலசலப்பு ஏற்பட்டு நித்தயபடி பூஜைகளும் நடைபெற்றன.

சாமிக்கு நெய்வேத்திய நித்தியபடி செய்த பிரசாதம் வழங்கும்போது, வடகலை
பிரிவினரே வேத பிராயணம் பாடியபடி வந்த நிலையில் எதற்காக தென்கலை பிரிவினருக்கு வழங்கப்படுகிறது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவை
இருதரப்பினருக்குமிடையே தள்ளு முள்ளுவாக மாறி வீடியோ எடுத்த செல்போன்கள்
தட்டிவிடப்பட்டு செல்போன்கள் பறந்தன.

இதனால் மண்டகபடி நடைபெற்ற இடத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு சிலர் சாமி தரிசனம் செய்ய முடியாது புறப்பட்டும் சென்றனர்.

இதனையடுத்து சுமார் 1 மணிநேர நடைபெற்ற பிரச்னைக்கு பின் கலைந்து சென்றனர். இதனால் மண்டகபடி எழுந்தருளிய இடத்தில் கால தாமதமாகி சற்று தாமதமாகவே சாமி புறப்படாகி  நள்ளிரவில் திருக்கோயிலை சாமி சென்றடையும் நிலைக்கு தள்ளப்பட்டது. அன்றைய இரவே பிரபந்தம் பாடிய நபர்களுக்கு கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் தோசையை பெற்றுக்கொள்வதிலும் இரு தரப்பினர் இடையே சண்டை நடைபெற்று உள்ளது.

இதனையடுத்து நேற்று இரவு புண்ணியகோடி வாகன உற்சவம் நடைபெற்றது. இந்த
உச்சகத்திற்குப் பிறகு பாசுரங்களை பாடிவரும் தென்கலை பிரிவினர், நம்மாழ்வாருக்கு பெருமாளின் சடாரி வைத்து மரியாதை செய்வது வழக்கம். ஆனால் அவற்றை செய்யவிடாமல் பெருமாளின் சடாரியை வடகலை பிரிவின தள்ளி விட்டதாக கூறி தென்கலை பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீண்டும் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’: கண்ணை பறிக்கும் வெள்ளை நிற சிண்ட்ரெல்லா உடையில் தோன்றிய மனுஷி சில்லர்!!

Web Editor

செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது: முதலமைச்சர்

EZHILARASAN D

நாகை : வேளாங்கண்ணி திருவிழா நிறைவு

Dinesh A