உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டையில் மகளிர் மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது
உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் இன்று உலக மகளிர் தினத்தை ஒட்டி
விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. பெண்களின் பாதுகாப்பு ,பெண்
குழந்தை திருமணம் தடுப்பு, பெண்கல்வி ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி
இவ்விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியானது நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மகளிர் மினி மாராத்தான் போட்டியினை திமுக மாநில சுற்றுச் சூழலின் துணைச் செயலாளர் வினோத்காந்தி மற்றும் சமூக ஆர்வலர் நல்லசாமி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
முத்துக்கடை பேருந்து நிலைய வளாகத்தில் தொடங்கிய இந்த மினி மாரத்தான் போட்டியானது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மகளிருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது .இந்த மினி மாரத்தான் போட்டியில் ஏராளமான மகளிர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்