யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் பஞ்சாபைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு பிருந்தாவனத்தில் உள்ள யமுனை ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் யமுனை ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். படகு ஆழமான பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ​​மிதக்கும் படகுத்துறையின் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறியுள்ளனர். இதுவரை 16 முதல் 17 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், படகில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமாக அப்பகுதியில் மிதவைப் பாலம் ஒன்று சமீபத்தில் அகற்றப்பட்டுள்ளது. அதனால் சில மிதவைப் பால உருளைகள் ஆற்றில் மிதந்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.