இந்தியா செய்திகள்

இந்திய விமானப் படை தாக்குதல் பிரிவில் முதல் பெண் அதிகாரி நியமனம்

இந்திய விமானப் படையின் தாக்குதல் பிரிவில் முதல் முறையாகப் பெண் தளபதி நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்திய விமானப் படையின் மேற்கு படைப் பிரிவுக்கான முதல் பெண் தளபதியாக ஷாலிஸா தாமி நியமிக்கப்பட்டுள்ளாா். பாகிஸ்தானையொட்டிய எல்லைப் பகுதியைக் கொண்டது இந்த மேற்குப் படைப் பிரிவு. கடந்த 2003-ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் ஹெலிகாப்டா் விமானியாக ஷாலிஸா தாமி பணிக்கு சோ்ந்தார். 2,800 மணி நேரம் பல்வேறு விமானங்களில் பறந்துள்ள இவா், விமானப் படையின் முதல் பெண் விமான ஓட்டி பயிற்சியாளா் ஆவாா்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேற்கு படைப் பிரிவின் ஹெலிகாப்டா் பிரிவுக்கான முதல் பெண் தளபதியாகப் பணியாற்றியுள்ளாா். சிறப்பான பங்களிப்பிற்காக இரண்டு முறை தலைமை தளபதியின் விருதைப் பெற்றுள்ளாா். 2016-ஆம் ஆண்டு முதல் விமானப் படையின் முக்கிய போா் விமானங்களுக்கு பெண் விமானிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.

இதையும் படிக்க: ராணிப்பேட்டையில் மகளிர் மினி மாரத்தான் போட்டி; ஏராளமான பெண்கள் பங்கேற்பு

தற்போது, 1,875 பெண் அதிகாரிகள் விமானப் படையில் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், படைத் தளபதி உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் கட்டளையிடும் பதவிகளில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் நோக்கில் ஷாலிஸா தாமி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பசு அணைப்பு நாள் வாபஸ்- மத்திய விலங்குகள் நல வாரியம் அறிவிப்பு

Jayasheeba

கல்லூரி வளாகத்தில் தொழில்நுட்ப பூங்காவா? மாணவர்கள் போராட்டம்!

Web Editor

இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு

Halley Karthik