முக்கியச் செய்திகள் குற்றம்

மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கணவன்!

மனைவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுப்படவைக்கபோவதாக மிரட்டி கணவன் குடும்பத்தோடு சென்னை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளன்.

சென்னை ஆவடியை சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் என்பவர் சமீபத்தில் அடையாறு சேர்ந்த பெண் ஒருவரை முகநூலில் ஏற்பட்ட நட்பால் 2- வதாக திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் வெறும் 10 நாட்கள் குடும்ப வாழ்க்கை வாழ்ந்த பிரசன்ன வேங்கடேசன் தனது மனைவியை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட வைக்க போவதாக அடிக்கடி மிரட்டியுள்ளார்.

மறுத்தால் ரகசியமாக எடுத்த அந்த வீடியோ காட்சிகளை இணையதளம் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன் என மிரட்டி வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து பிரசன்ன வெங்கடேசன் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து அந்தப் பெண்ணை தாக்கி அவரிடம் இருந்த 5 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணம், செல்போன் ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டு துரத்திவிட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் ஆவடி காவல் நிலையத்தில் தைரியமாக அளித்த புகாரையடுத்து இதற்கு உடந்தையாக இருந்த பிரசன்ன வெங்கடேசனின் அப்பா ரங்கசாமி, அம்மா விஜயா, சகோதரி புவனேஸ்வரி உட்பட 4 பேரை கைது செய்த ஆவடி காவல்துறையினர்.

அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அனைவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement:

Related posts

“திமுகவில் குடும்ப உறுப்பினருக்கு மட்டுமே பதவி”-எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Jeba

பஞ்சாப் அணியை வீழ்த்தியது டெல்லி!

Karthick

வீரப்பன் ஊரில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 3 பேர் மட்டுமே!

Saravana Kumar