முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

உலக அளவில் இப்படியொரு சாதனை படைத்த சூர்யாவின் ’சூரரைப் போற்று’!

பிரபல திரைப்பட ரேட்டிங் தளமான ஐஎம்டிபி-யில், உலக அளவில் அதிக ரேட்டிங் பெற்ற படங்களின் வரிசையின் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ 3 வது இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது.

நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்து அமேசான் ஒடிடி தளத்தில் வெளியான படம், ’சூரரைப் போற்று’. ஊர்வசி, கருணாஸ், பரேஸ் ராவல், பூ ராமு உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.

சுதா கொங்கரா இயக்கி இருந்த இந்தப் படம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை சம்பவங்களை மையப்படுத்திய இந்தப் படம், தமிழ் உள்பட மற்ற மொழிகளிலும் வரவேற்பை பெற்றது.

ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி, உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 1000 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், முதல் 60 இடங்களில் நான்கு இந்தியப் படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சூர்யாவின் சூரரைப் போற்று படம், 3 வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

விஷ்ணு விஷால் நடித்த ’ராட்சசன்’ 34 வது இடத்தையும் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த ’விக்ரம் வேதா’ 58-வது இடத்தையும் ஆமிர் கான் நடித்த ’டங்கல்’ 60 வது இடத்தையும் பிடித்துள்ளன.

Advertisement:
SHARE

Related posts

”ஊழலுக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya

மும்பையில் கனமழையில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு

Halley karthi

ஐபிஎல் : மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி!

Ezhilarasan