திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக கூறி, தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “இன்றைய தினம் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பு ஏற்று ஐந்தாண்டு காலம் ஆகிவிட்டது.
இந்த ஐந்து ஆண்டு காலத்தில் தமிழக மக்கள் பட்ட துன்பம் ஏராளம். ஒவ்வொரு நாளும் மக்கள் படுகின்ற துன்பம் பற்றி ஆட்சியாளர்கள் கவலை படாமல் உள்ளனர். இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்று ஸ்டாலின் சொல்வார். எதில் முதல் மாநிலம் கடன் பெறுவதில் முதல் மாநிலமாக உள்ளது. இந்த கடனை எல்லாம் நாம் தான் அடைக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டு இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒரு வருடத்திற்கு 1408 கொலைகள் நடந்துள்ளது. 2026 இல் மொத்தமாக 110 கொலைகள் நடைபெற்றிருக்கிறது. பிப்ரவரியில் 84, மார்ச் மாதம் 52 என கடந்த 75 நாட்களில் மொத்த கொலை 246 கொலைகள் நடைபெற்றிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.







