யூடியூப் பார்த்து பிரசவம்; குழந்தை இறந்த பரிதாபம்

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் காணொளிகளைப் பார்த்து சமைக்கலாம். ஆனால், கருவுற்ற பெண்ணுக்குப் பிரசவம் பார்ப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு… குழந்தை கருவுற்றது துவங்கி குழந்தை பெற்றுக்கொள்வது…

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் காணொளிகளைப் பார்த்து சமைக்கலாம். ஆனால், கருவுற்ற பெண்ணுக்குப் பிரசவம் பார்ப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…

குழந்தை கருவுற்றது துவங்கி குழந்தை பெற்றுக்கொள்வது வரை உள்ள வலியும் வேதனையும் பெண்களே அறிவர். கருவுற்ற குழந்தை இந்த பொற்பூமியை பார்க்கும் வரை பக்குவமாய் பார்த்துக்கொள்ளும் அழகே, கணவன் – மனைவியின் தனித்துவம்தான். அத்தகைய மகப்பேறுவின் மகத்துவத்தை முறையான விழிப்புணர்வு இன்றி சிதைக்க நேர்ந்தால் நெஞ்சம் பொருத்துக்கொள்ளுமா?

அரக்கோணம் அருகே யூடியூப் வீடியோ பார்த்து மனைவிக்குப் பிரசவம் பார்த்த கணவரால், குழந்தை இறந்த கொடூர சம்பவம் இதயத்தைக் கனக்கச்செய்கிறது. மருத்துவ கல்வியின் அவசியத்தை உணராத சிலர் நோய் தடுப்பு காரணியாக சமூக வலைத்தளங்களில் ஆதாரம் இன்றி வெளியிடப்படும் வீடியோக்களை கண்டு, நமக்கு நாமே சிகிச்சை மேற்கொள்வது சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது. பிரசவத்தின்போது தாய்க்கும் – சேய்க்கும் நடைபெறும் போராட்டம் கை தேர்ந்த மருத்துவர்களுக்குக் கூட சவாலான ஒன்றாகத் தான் அமைகிறது.

குழந்தைப் பேறு பல தம்பதிகளின் நிறைவேறாத கனவுகளில் ஒன்றாகும். சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் வீடியோக்கள் கண்டு சமைக்கலாம். ஆனால் கருவுற்ற பெண்ணுக்குப் பிரசவம் பார்ப்பது விபரீத செயலாகும். பிறந்த குழந்தையை சிசுவதை செய்வது மற்றும் கருவுற்ற பெண்ணுக்கு சட்டத்திற்கு எதிராக கருக்கலைப்பு செய்வதைப்போல, பத்து மாதம் சுமந்து பிரசவ நேரத்தில் தவறான அணுகுமுறையில் அந்த குழந்தையின் உயிரைப் பறிப்பதும் சட்டப்படி குற்றமே என்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம். மகப்பேறு காலங்களில் மருத்துவரின் முறையான சிகிச்சையில் குழந்தை பெற்றுக்கொள்வதே தாய்க்கும் – சேய்க்கும் ஆரோக்கியத்தைத் தரும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.