“ஜெகதீப் தன்கர் நலம் பெற வாழ்த்துகிறேன்” – பிரதமர் நரேந்திர மோடி!

குடியரசு துணைத் தலைவர் பதவி உட்பட பல்வேறு பதவிகளை ஏற்று நாட்டிற்கு சேவை செய்தவர் ஜெகதீப் தன்கர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் உடல் நலனை கருத்தில் கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்வதாக முடிவு செய்தார். அதன்படி ராஜினாமா கடிதத்தை நேற்று இரவு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து அவரின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் இன்று ஏற்றுக்கொண்டார்.

இதனிடையே பல்வேறு அரசியல் தலைவர்களும் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரின் செயல்பாடுகளை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “இந்தியாவின் குடியரசு துணை தலைவர் பதவி உட்பட பல்வேறு பதவிகளை வகித்ததோடு நாட்டிற்கு சேவை செய்தவர் ஜெகதீப் தன்கர். ஜெகதீப் தன்கர் நல்ல உடல் நல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.