இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 6-4, 6-2, 7-6 என்ற செட் கணக்கில், நெதர்லாந்து வீரர் போடிக் வேனை வீழ்த்தினார்.
இதன்மூலம் அவர் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நடால், 8வது முறையாக விம்பிள்டன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் முதல் செட்டை போட்டிக் வேன் 4-6 என்ற கணக்கில் கோட்டைவிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டாவது செட்டையும் 6-2 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றினார் நடால். வெற்றியைத் தீர்மானிக்கு கடைசி செட் ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது.
விட்டுக் கொடுக்காமல் மல்லுக்கட்டினார் போடிக் வேன். அந்த ஆட்டம் டை-பிரேக்கர் வரை சென்றது. இதையடுத்து, தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், 7-6 என்ற கணக்கில் அந்த செட்டை தன்வசப்படுத்தினார்.
போட்டித் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள நடால், 11வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸை நாளை எதிர்கொள்கிறார். விம்பிள்டனில் 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் நடால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சமீபத்தில் பிரெஞ்சு ஓபனில் நடால் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நடால் தான் அதிக முறை (22 முறை) கிராண்ட்ஸ்லாம் வென்றவர்.
நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சுக்கும் நாளை காலிறுதி ஆட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.