ஸ்பெயினைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ரபேல் நடால் ATP டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 5 ஆம் இடத்திலிருந்து, 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில், நார்வேயின் காஸ்பெர் ரூட் உடன் மோதி அசத்தல் வெற்றி பெற்றார் நடால்.
இந்த வெற்றியின் மூலம் 14 வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 22 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று இமாலய சாதனை படைத்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் இவரே.
இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ATP தரவரிசைப் படி, ரபேல் நடால் 5 ஆம் இடத்தில் இருந்து 4 வது இடத்திற்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: கே.எல்.ராகுல் திடீர் விலகல்; புதிய கேப்டன் இவர் தான்
8770 புள்ளிகளுடன் முதலிடத்தில் செர்பியா வீரர் ஜோகோவிச் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் ரஷ்ய வீரர் மெத்வதேவ், மூன்றாவது இடத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்ட் ஸ்வரேவ் ஆகியோர் உள்ளனர்.
-மணிகண்டன்








