மீண்டும் ராஜமவுலி படத்தில் நடிப்பீர்களா? கிச்சா சுதீப் பதில்!

எங்க செட்டில் பயங்கர பிஸியான நடிகர் என்றால் யோகிபாபு தான் என்று நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிக்க, விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர் கிச்சா சுதீப் ‘மார்க்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு காந்தாரா புகழ் அஜனீஸ் இசையமைக்கிறார். இந்த படம் டிசம்பர் 25ல் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் நடந்த மார்க் பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கிச்சா சுதீப், ’மார்க்’ போன்ற படத்திற்காக சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது பெருமையான விஷயம். நிச்சயம் அதற்கான அவுட்புட் திரையில் பார்ப்பீர்கள். கதை சொல்லுதல், புது காட்சிகள், பிசினஸ், நடிகர்களின் நடிப்பு என எல்லாவற்றிலும் புதுமை – வெரைட்டியை பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்ற பணியை இந்தப் படத்தில் செய்திருக்கிறோம் என நம்புகிறேன்.

விஜய் கார்த்திகேயன் கதை, இயக்கம் எனக்குப் பிடிக்கும். அதனால் தான் அவருடன் மீண்டும் மேக்ஸ் படத்துக்கு பின் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். எங்க செட்டில் பயங்கர பிஸியான நடிகர் என்றால் யோகிபாபுதான். அவர் கால்ஷீட் வாங்குவது அவ்வளவு கஷ்டம். அவரும் இன்ஸ்டால்மெண்ட்டில் வந்து நடித்துக் கொடுப்பார். நாங்கள் படப்பிடிப்பு முடிந்து பேக்அப் செய்து கொண்டு இருப்போம். அப்போது இயக்குனர் வந்து சார் படப்பிடிப்பு தொடரலாம். யோகிபாபு வந்து கொண்டு இருக்கிறார். அவர் தேதி பின்னர் கிடைக்காது என்பார்.

நாங்களும் நடிப்போம், நடிகர்கள் நாங்களாவது அவ்வப்போது ஓய்வெடுத்தோம். ஆனால், இந்தப் படத்திற்காக இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் இயக்குநர், மற்றொருவர் ஒளிப்பதிவாளர். கொரானாவுக்கு பின் சினிமா நிலைமை மாறிவிட்டது. தயாரிப்பு செலவு அதிகமாகிவிட்டது, ஆனாலும், ஒரு படம் சிறப்பாக வர, படச்செலவு, மற்றவர்கள் சம்பளத்தை குறைக்க முடியாது. ஆனால், பட்ஜெட்டில் பெரும்பகுதியாக இருக்கும் ஹீரோக்களின் சம்பளத்தில் புது மாற்றம் செய்யலாம். அந்த பணத்தை படத்தயாரிப்புக்கு செலவிடலாம். அந்த வகையில் ரிவென்யூ ஷெரிங் என்ற முறை வருகிறது.

அதன்படி தயாரிப்பாளர்களும், ஹீரோக்களும் படத்தின் லாபத்தில் ஒரு பகுதியை பிரித்துக் கொள்கிறார்கள். ஹீரோக்களின் சம்பளம் வேறு மாதிரி பணமாக வருகிறது. அதற்கு அந்த தயாரிப்பாளருக்கும், ஹீரோவுக்கும் நல்ல நட்பு அவசியம். இந்த படத்தில் ரிவென்யூ ஷெரிங் அடிப்படையில் நான் ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன். நானும் இப்ப தமிழ் நடிகர் தான். என்னை வைத்து அடுத்து படம் இயக்க ஆசை. நம்மை நாமே ரசிக்க வேண்டும். மாநாடு படத்தில் நான் நடிக்க வேண்டியது. அந்த சமயத்தில் நடக்கவி்லலை. உண்மையில் எந்த கேரக்டருக்கு கேட்டார்கள் என்பதை மறந்துவிட்டேன்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். நானும் நல்ல பேசுறேன். அதுக்காக, அரசியலுக்கு செல்ல முடியாது. முதல்வர் ஆக நினைக்க முடியாது. மீண்டும் நான் கர்நாடகாவுக்கு போகணும். ரசிகர்கள் சினிமாவை ரசிக்க வேண்டும். சினிமாவால் சண்டைபோடக்கூடாது. ராஜமவுலி இயக்கிய நான் ஈ படம் எனக்கு கிடைத்த பெரிய விஷயம். அதனால் எனக்கு இந்தியளவில் அங்கீகாரம் கிடைத்தது. நான் பெயிண்டிங் ஆக முடியாது. அதில் நல்ல கலர். என்னை வைத்து படம் இயக்குபவர்களை நான் விரும்புகிறேன். அவர்களுடன் பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.