இந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற 18 ஆவது ஐபிஎல் தொடரை பட்டிதார் தலைமையிலான பெங்களூரு அணி வென்று கோப்பை கைப்பற்றியது.
இதையடுத்து ஐபிஎல் 2026 தொடரை முன்னிட்டு மினி ஏலம் இன்று அபுதாபியில் நடைபெறுகிறது. இதற்கான தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பித்தன. அதன் படி மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர். 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 1040 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இந்த நிலையில் ஐபிஎல் 2026 தொடருக்கன மினி ஏலம் அபுதாபியில் மதியம் 2;30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.







