முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விஜய் – அஜீத் சந்திப்பு அந்த நாட்டுல நடக்குதாமே?

நடிகர்கள் விஜய்-யும் அஜித்குமாரும் வெளிநாட்டில் நடக்கும் படப்பிடிப்பில் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிரார். ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படத்தை, போனி கபூர் தயாரிக்கிறார். இந்தி நடிகை ஹூமா குரேஸி ஹீரோயினாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது.

ஹூமா குரேஸி

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர் களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் சேஸிங் காட்சி ஒன்று இடம்பெறுகிறது. இதை வெளிநாட்டில் படமாக்க படக்குழு முடிவு செய்திருந்தது. கொரோனா காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு ரத்து செய்யப் பட்டதால், வெளிநாடு செல்ல முடியவில்லை.

இந்நிலையில் அந்தக் காட்சியை இப்போது படமாக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக, படக்குழு ரஷ்யா செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே விஜய் நடிக்கும் ’பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங்கும் ரஷ்யாவில் நடக்க இருப்ப தாகக் கூறப்படுகிறது. தற்போது சென்னையில் நடந்து வரும் ’பீஸ்ட்’ படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அஜித்தின் ’வலிமை’, விஜய்யின் ’பீஸ்ட்’ படங்களின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் ரஷ்யாவில் நடக்க இருப்பதால், அங்கு இருவரும் சந்திக்க இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின் றனர். இது தொடர்பான செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

நடப்பு கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் விற்பனை துவக்கம்!

Vandhana

இயக்குநர் பெயரில் ஆபாச மெசேஜ்: பிரபல நடிகை பகீர் புகார்

Gayathri Venkatesan

“கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை! ” ராதாகிருஷ்ணன்

Halley karthi