முக்கியச் செய்திகள் தமிழகம்

’தடுப்பூசி போட்ட சர்டிபிகேட் இருக்கா?’ அப்ப காபி ஒரு ரூபாய்தான்!

மதுராந்தகம் அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு காபி விற்பனை செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், தேசிய நெடுஞ்சாலை அருகே ’மதர் காபி ஷாப்’ என்ற பெயரில் கடை நடத்தி வருபவர் முரளி. இவர் தன்னுடைய கடை களுக்கு வரும் வாடிக்கையாளர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றி தழை காண்பித்தால் 25 ரூபாய் மதிப்புள்ள காபியை, ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகிறார்.

தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், தடுப்பூசி செலுத்தி இருந்தால் நான்கு வாரத்திற்கு இவ்வாறு காபி வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார் முரளி. ஒரு நபருக்கு வாரம் ஒரு முறைதான் இப்படி காபி வழங்கப்படும். காபிக்காக, தான் வாங்கும் ஒவ்வொரு ரூபாயையும் நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாவது அலையை தடுப்பதற்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இவ்வாறு செய்வதாக முரளியின் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

மக்கள் கேட்பது இல்லை என்ற தைரியத்தில்தான் ஆட்சியாளர்கள் தவறுகள் செய்கின்றனர் : கமல்ஹாசன் குற்றச்சாட்டு!

Saravana

ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் முதல்வர் ஆய்வு!

Halley karthi

பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் பிரிவு நீக்கமா? மத்திய அரசு விளக்கம்!

Nandhakumar