அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா?? – இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை!!

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக, தொழிற்சங்கத்தினருடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள்…

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக, தொழிற்சங்கத்தினருடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் சென்னையில் மாநகர பேருந்துகளை நிறுத்தி விட்டு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் அவதியடைந்தனர். இந்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்தார்.

இதையும் படியுங்கள் : அரசு குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் – முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க இபிஎஸ், டிடிவி தினகரன் வலியுறுத்தல்!! 

இதையடுத்து இன்று தொழிலாளர்கள் நலத்துறை இணை ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.