தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுமா? மத்தியமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார். “காசி தமிழ் சங்கமம்” இணைய தளத்தை மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தினார். பின்னர் இந்த நிகழ்ச்சி…

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.

“காசி தமிழ் சங்கமம்” இணைய தளத்தை மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தினார். பின்னர் இந்த நிகழ்ச்சி தொடர்பாக மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் டெல்லி தேசிய ஊடக மையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், காசிக்கும் தமிழகத்துக்குமான கலாச்சார, பண்டைய தொடர்பு மற்றும் அறிவுசார் தொடர்புகளை கண்டறியும் விதமாகவும், புதுப்பிக்கும் விதமாகவும் வரும் நவம்பர் 16ம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு ” காசி தமிழ் சங்கமம்” திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ராமேஸ்வரம், கோவை, சென்னை ஆகிய ஊர்களில. இருந்து சுமார் 8 குழுக்களாக பல்வேறு பிரிவுகளை (வணிகளம், கலை, இலக்கியம் ) உள்ளிட்டவையை சார்ந்த 2500 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்காக சிறப்பு ரயில்கள் மேற்கண்ட நகரங்களில் இருந்து புறப்படும்.

தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வை தமிழ் வழியிலும் எழுதலாம் என்ற வசதி உள்ளது. ஒட்டுமொத்தமாக நீட் விலக்கு அளிக்கப்படுமா எனற கேள்விக்கு? பதிலளிக்காமல் நன்றி வணக்கம் என தெரிவித்தார்.

இந்தி அதிகம் உள்ள இடத்தில், இந்தி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். மற்ற இடங்களில் அந்த மாநிலங்களில் மாநில மொழிகள் இணைப்பு மொழியாக இருக்கும் என்பதை ஏற்கனவே மத்திய அரசு கூறியுள்ளது என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.