’அது ஸ்கூல் மாதிரிங்க…’ சிஎஸ்கே-வுக்கு திரும்புகிறாரா அஸ்வின்?

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஆர்.அஸ்வின், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்ப, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, 2008- ஆம் ஆண்டு…

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஆர்.அஸ்வின், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்ப, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, 2008- ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் சுழல் பந்துவீச்சாளர் ஆர்.அஸ்வின். சிஎஸ்கே-வுக்காக 94 போட்டிகளில், விளையாடி 90 விக்கெட்டுகளை சாய்த்துள்ள அவர், பிறகு மற்ற அணிகளுக்கு சென்றார். கடைசியாக டெல்லி அணியில் இடம்பெற்றிருந்த அவர், இப்போது ஏலத்துக்காக, விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

ஐபிஎல் 2022 -க்கான வீரர்கள் ஏலத்தில் புதிய கேப்டன்கள், புதிய அணிகள், வீரர்கள் வெவ்வேறு அணிகளுக்கு மாறுவது என ஆச்சரிய ஆட்டம் நடக்க இருக்கிறது. அப்போது வீரர்கள் தங்களின் பழைய அணிக்கு திரும்பவும் வாய்ப்பிருக்கிறது. சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் வர வாய்ப்பிருப்பதாகக் கூறப் படுகிறது.  அது உண்மைதானா என்பது பற்றி  அஸ்வினிடம் கேட்டபோது அவர் கூறியிருப் பதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, என் மனதுக்கு நெருக்கமானது. அது ஒரு பள்ளிக்கூடம் மாதிரி. அங்குதான் நான் எல்.கே.ஜியில் இருந்து ஆரம்பித்து பத்தாம் வகுப்புவரை படித் தேன். பிறகு 11, 12 ஆம் வகுப்புகளுக்கு வேறு பள்ளிக்கு சென்றுவிட்டேன். ஜூனியர் கல்லூரியை வேறொரு இடத்தில் படித்தேன். எல்லாம் முடிந்த பிறகு சொந்த வீட்டிற்கு வருவதுதானே நியாயம்? அதைத்தான் நானும் விரும்புகிறேன். ஆனால், அது ஏலத்தின் நிலையை பொறுத்து இருக்கிறது.

இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.