நடிகை ராஷ்மிகா மந்தனா, கன்னடத்தை சேர்ந்தவர் என்றாலும் அவர் தாய்மொழி அது இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
கார்த்தியின் ’சுல்தான்’ மூலம் தமிழுக்கு வந்தவர் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் அறிமுகமான, ராஷ்மிகா, அப்படியே டோலிவுட்டுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு டாப் ஹீரோக்களுடன் நடித்து வரும் அவர், முன்னணி நடிகையாக இருக்கிறார். அல்லு அர்ஜுன் ஜோடியாக அவர் நடித்துள்ள பான் இந்தியா படமான ’புஷ்பா’ நேற்று ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தை அடுத்து, சித்தார்த் மல்ஹோத்ராவுடன்‘மிஷன் மஜ்னு’, அமிதாப் பச்சனுடன் ‘குட் பை’ ஆகிய இந்தி படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது தாய் மொழி எது என்பதை தெரிவித்துள்ளார். அவர் கன்னடத்தைச் சேர்ந்தவர் என்பதால் கன்னடம் அவர் தாய் மொழி யாக இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், குடகு மொழிதான் தனது தாய் மொழி என்று தெரிவித்துள்ளார். மலையாளமும் தமிழும் அதிகமும் கன்னடமும் கொஞ்சமும் கலந்த மொழி இது.








