பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய திருப்பமாக, வைல்டுகார்டு போட்டியாளர்கள் 5 பேரும் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பட்டு உள்ளனர்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த 1-ம் தேதி தொடங்கி சண்டைக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. 9 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேருடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி முதல் வாரமே அனல் பறந்தது. கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
கடந்த வாரத்தில் வைல்டு கார்டு என்ட்ரி இருப்பதால், யார் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதுவரை 5 பேர் எலிமினேட் ஆகியுள்ள நிலையில், அதனை ஈடுகட்டும் விதமாக 5 பேரை உள்ளே அனுப்பி உள்ளதால் தற்போது வீடு மீண்டும் ஹவுஸ்புல் ஆகி உள்ளது.
ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டின் கேப்டன், 6 பேரை தேர்வு செய்து அவர்களை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைப்பார். அந்த வகையில் இந்த வார கேப்டனான பூர்ணிமா யாரை தேர்வு செய்தார் என்பது புரோமோவாக வெளியாகி உள்ளது.
அவர் புதிதாக வந்துள்ள வைல்டு கார்டு போட்டியாளர்களான பிராவோ, அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, அன்ன பாரதி ஆகியோருடன் விசித்ராவையும் தேர்வு செய்து ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதை கவனித்த வைல்டு கார்டு போட்டியாளர்கள் என்ன பிளான் பண்ணி பண்றீங்களா என கேட்க, அதற்கு பூர்ணிமாவும் ஆமாங்க பிளான் பண்ணி தான் பண்ணேன் என சொல்லியதால் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கும் இடையே முதல் நாளே மோதல் வெடித்துள்ளது.







