விருதுகளை வாங்கி குவித்த ’கூழாங்கல்’ திரைப்படம் – விமர்சனம்!

சர்வதேச அளவில் விருதுகளை அள்ளி குவித்த கூழாங்கல் திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. வினோத்ராஜா இயக்க விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. பொட்ட காட்டில்…

சர்வதேச அளவில் விருதுகளை அள்ளி குவித்த கூழாங்கல் திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. வினோத்ராஜா இயக்க விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. பொட்ட காட்டில் வசிக்கும் குடும்பம் அந்த குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளை அடிப்படையாக வைத்து எடுத்திருக்கும் சின்ன பட்ஜெட் திரைப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

படத்தின் கதை

மதுபழக்கத்திற்கு மிகவும் அடிமையான கணபதி (கருத்தடையான்) என்ற நபர் தண்ணீர் பஞ்சத்துடன் உள்ள வறண்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார். தன்னுடைய மனைவியோ கோபித்து கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்றுவிடுகிறார். இந்நிலையில், தனது மகனை (செல்லப்பாண்டி) பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு உன்னுடைய அம்மாவை அழைத்து வா இல்லை என்றால் நான் வேறொரு திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் நீண்ட தூரம் நடந்து கொண்டிருக்கும் தந்தையும் மகனும் அடுத்தடுத்து செய்யும் செயல்கள் மற்றும் அந்த நண்பகல் நேரத்துப் பயணத்தில் அவர்களைச் சுற்றி அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதி கதை.

படம் பற்றிய அலசல்

தந்தை, மகன் இடையே இந்தப் பயணம் தான் படத்தின் சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது. சிறுவனாக இருந்தாலும் அவனுக்கு உண்டான பக்குவத்தைப் பார்க்கும் போது வியப்படைய வைக்கிறது. மேலும், இந்த பயணம் சென்று கொண்டிருக்கும்போதே சிறுவனின் தந்தை சிகரெட், குடி போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்.

கூழாங்கள் என்று தலைப்பு வைப்பதற்கு காரணம் என்ன என்ற சஸ்பென்சை உடைப்பது இப்படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட். மேலும் அறிமுக நடிகர்களாக இருந்தாலும் நிறைய இடங்களில் நீண்ட காட்சிகளை வைத்து பிரமிக்க செய்திருக்கிறார். படத்திற்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் சிறப்பாக இயக்குநர் செயல்பட்டு இருக்கிறார். குறிப்பாக சிறுவனின் நடிப்பு மிகவும் பிரமாதம்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் கெட்ட வார்த்தைகள் சில நேரத்தில் சலிப்பை தட்டுகிறது. அந்த கதாபாத்திரம் தான் பேசிருக்கிறது என்றாலும் சென்சார் இல்லாமல் கேட்கும் போது சலிப்பாகிறது. மேலும் கமர்சியல் படங்களை விரும்புபவர்களுக்கு கூழாங்கல் படம் பிடிக்குமா என்பது சந்தேகம் தான்.

-சுஷ்மா சுரேஷ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.