ஊருக்குள் படையெடுத்த யானைக்கூட்டம்!

நீலகிரி மாவட்டத்திற்குள் யானைக்கூட்டம் படையெடுக்க துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு, சமவெளி பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக  மேட்டுப்பாளையம் காரமடை உள்ளிட்ட மலை அடிவாரப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக படையெடுக்க துவங்கியுள்ளன.…

நீலகிரி மாவட்டத்திற்குள் யானைக்கூட்டம் படையெடுக்க துவங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு, சமவெளி பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக  மேட்டுப்பாளையம் காரமடை உள்ளிட்ட மலை அடிவாரப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக படையெடுக்க துவங்கியுள்ளன.

குன்னூர் காட்டேரி பூங்கா பகுதி அருகில் தோட்டத்தில் நடவு செய்யப்பட்டு இருந்த முட்டைகோஸ்களை சேதப்படுத்திவிட்டு, குட்டியுடன் 5 யானைகள் முகாமிட்டுள்ளன. இதனை விரட்டும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இரவு நேரத்தில் ஒற்றையடி பாதையில் யாரும் நடந்து செல்ல வேண்டாம் என வனத்துறையினர் கூறி உள்ளனர்.

-ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.