முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மத்திய முன்னாள் அமைச்சர் மனைவி கொடூரக் கொலை

மத்திய முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம், டெல்லியில் அவர் வீட்டில் நேற்றிரவுக் கொல்லப்பட்டார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மத்திய முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம். 1984 முதல் 1996 வரையில் சேலம் தொகுதியில் எம்.பியாக இருந்தார். பிறகு, 1998 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை திருச்சி தொகுதி எம்.பியாக இருந்தார். 1991 முதல் 1993 வரை மத்திய அமைச்சராக பதவி வகித்தார். பின் பாஜகவில் சேர்ந்த அவர், வாஜ்பாய் அரசில் 1998 முதல் 2000 வரை மின்துறை அமைச்சராக இருந்தார். 2000 ஆம் வருடம் காலமானார்.

இவர் மனைவி கிட்டி குமாரமங்கலம் (67), டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் பகுதியில் வசித்துவந்தார். நேற்றிரவு இவர் வீட்டுக்குச் சலவை தொழிலாளி வந்துள்ளார். கதவைத் திறந்த வேலைக்காரப் பெண்ணை, தாக்கி ஓர் அறைக்குள் தள்ளினார். பின்னர் இன்னும் 2 பேர் வீட்டுக்குள் வந்தனர். அவர்கள், கிட்டி குமாரமங்கலத்தைத் தலையணையால் அமுக்கி கொடூரமாகக் கொன்றுவிட்டு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுபற்றி நேற்றிரவு 11 மணியளவில், வேலைக்காரப் பெண் போலீசுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் விசாரணை நடத்தி, சலவைத் தொழிலாளி ராஜூவை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி இன்னும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

5ஜி தொழில்நுட்பம்: சென்னையில் MIMO உற்பத்தியை தொடங்கிய நோக்கியா!

Jayapriya

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Ezhilarasan

ஒரே நாளில் 1 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி!

Niruban Chakkaaravarthi