முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்: ஓ.பன்னீர்செல்வம்

பாஜகவுடனான கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியால் தான் தோல்வியடைந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து பாஜக நிர்வாகிகள் கே.டி.ராகவன் உள்ளிட்ட சிலர் பதிலடி கொடுத்தனர். இது அதிமுக- பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பாஜக மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கூட்டணி தொடரும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் பாஜக வரவேற்கும்: எல்.முருகன்!

Dhamotharan

’பொறுத்தார் பூமி ஆள்வார்’: மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கே.பாக்யராஜ் கடிதம்!

Halley karthi

கொரோனா விழிப்புணர்வு: மூக்கு வழியாக 100 பலூன்களை ஊதி சாதனை!

Dhamotharan