சென்னையில் கணவன் நடத்தையில் சந்தேகம் அடைந்த மனைவி அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் – உஷா தம்பதி. இவர்கள் இருவரும் அவர்களது குழந்தைகளுடன் திடீரென மாயமாகினர். இதுகுறித்து பாஸ்கரின் தாய், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே, சிக்கராயபுரம் கல்குவாரியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், பாஸ்கரின் சடலம் மீட்கப்பட்டது.
இதையடுத்து, தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். இதனிடையே காணாமல் போன உஷா குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதன் முடிவில், பாஸ்கருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக உஷாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர், தனது சகோதரர் பாக்கியராஜ் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பாஸ்கரை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.







