கொரோனா 3-வது அலை தவிர்க்கமுடியாதது : அறிவியல் ஆலோசகர் தகவல்!

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்கமுடியாதது என மத்திய அரசுக்கான தலைமை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 3,82,315 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,780…

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்கமுடியாதது என மத்திய அரசுக்கான தலைமை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 3,82,315 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,780 பேர் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 2,06,65,148 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,26,188 பேர் மரணமடைந்துள்ளனர். தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கொரோனா மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தநிலையில் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை அதிக தீவிரத்துடன் பரவி வரும் நிலையில், மூன்றாவது அலை அதிக அளவில் பரவும் என மத்திய அரசுக்கான தலைமை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் தெரிவித்தார். மேலும் கொரோனா மூன்றாவது அலை எப்போது பரவும் என்று நம்மால் கணிக்க இயலாது என்றும் அதனை எதிர்கொள்ள மக்கள் தயாராகவேண்டும் எனவும் அதனைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் இப்போதிலிருந்தே மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.