படம் பார்க்க முதலில் அனுமதி மறுத்தது ஏன்?- திரையரங்கு நிர்வாகம் விளக்கம்

படம் பார்க்க சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்பதற்கான விளக்கத்தை ரோகிணி திரையரங்கு நிர்வாகம் வெயிட்டுள்ளது.  சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள…

படம் பார்க்க சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்பதற்கான விளக்கத்தை ரோகிணி திரையரங்கு நிர்வாகம் வெயிட்டுள்ளது. 

சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் பத்து தல. இதில் நடிகர் சிம்பு ஏஜிஆர் என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். மணல் மாபியாவை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.முன்னதாக பத்து தல படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது

இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபிலி என் கிருஷ்ணா இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். பத்து தல திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இன்று ரோகிணி திரையரங்கில் பத்து தல படம் பார்க்க வந்த சிலரை, அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து ரசிகர்கள் திரையரங்கு ஊழியர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட பின்னர் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

https://twitter.com/RohiniSilverScr/status/1641320174069620737?t=0ag0ope4jpocbFgyCUaUjA&s=08

இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு திரையரங்கு நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதில், பத்து தல படத்திற்கு யுஏ சான்றிதழ் தான் வழங்கப்பட்டுள்ளது. சிலர் 2, 6, 8 மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் படம் பார்க்க வந்தனர். எனவே சட்டப்படி குழந்தைகள் இந்த படத்தை பார்க்க கூடாது என்பதால் தான் ஊழியர்கள் அவ்வாறு நடந்து கொண்டனர். ஆனால் பின்னர் அவர்கள் பத்து தல படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர் என்று கூறியுள்ளது.

மேலும், அவர்கள் திரையரங்கில் அமர்ந்து படம் பார்க்கும் வீடியோவையும் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.