இங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கொரோனா பரவல் காரணமாக 3 மாதங்களுக்கு மேலாக கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறையத் தொடங்கிய நிலையில், படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஜூலை 19 முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் முழுமையாக தளர்த்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டின் கேபினட் அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார். மாஸ்க் அணிவதில் இருந்து பொதுமக்கள் விடுபடும் காலம் வந்துவிட்டது எனக்கூறிய அவர், மாஸ்க் அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். இன்னும் சில நாட்களில் இதற்கான அறிவிப்பை பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் எனவும் ஜென்ரிக் தெரிவித்துள்ளார்.
டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவிய போதிலும், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ள ஜென்ரிக், நாடு முழுவதும் 18 வயதுக்கு மேட்பட்டவர்களில் இதுவரை 85 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.







