முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

ராணி எலிசபெத்தின் சவப்பெட்டி மீது வைக்கப்பட்டிருந்த கடிதம் எதற்கு?

ராணி எலிசபெத்தின் இறுதிஊர்வலத்தின்போது, அவரது சவப்பெட்டி மீது வைக்கப்பட்டிருந்த கடிதம் மன்னர் சார்லஸ் எழுதியிருந்தது. அதில் தனது தாய்க்காக உருக்கமாக எழுதியுள்ளார்.

 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடலுக்கு நேற்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டு ஊர்வலகமாக எடுத்து செல்லப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் உள்ள தேவாலயத்தில் ராணியின் உடலுக்கு பிரார்த்தனை நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

பின்னர் அங்கிருந்து உடல் எடுத்து செல்லப்பட்டு வின்ஸ்டர் கோட்டையில் அரசு குடும்பத்து மரியாதையுடன் ராணி 2-ம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ் அவரது மகன்கள் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர் ராணியின் உடலை பின் தொடர்ந்து சென்றனர்.

மேலும் 6,000 ராணுவ வீரர்கள் புடைசூழ, ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி ஆயுதங்கள் தாங்கி செல்லும் வாகனத்தில் லண்டன் வீதிகளில் ஊர்வலமாக சென்றது. சவப்பெட்டியில் ராணியின் தனிப்பட்ட கொடி, கோகினூர் வைரம் பொறிக்கப்பட்ட கிரீடம், செங்கோல் ஆகியவையும் வைக்கப்பட்டிருந்தது.

 

ராணியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மன்னர் சார்லஸ் உட்பட அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் கருப்பு நிற ராணுவ உடையில் காணப்பட்டனர். மேலும் ராணியின் சவப்பெட்டி மேல் வைக்கப்பட்டிருந்த பூக்கள், பக்கிங்ஹோம் அரண்மனையில் வளர்க்கப்பட்ட பூக்கள். இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் வைலட் நிறங்கள் கொண்ட அந்த பூக்கள் ராணிக்கு மிகவும் பிடித்தமான பூக்கள் என கூறப்படுகிறது.

மேலும் அந்த பூக்களுக்கு மத்தியில் ஒரு கடிதம் வைக்கப்பட்டிருந்தது. அது, மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது தாய்க்கு இறுதியாக எழுதிய கடிதம் என்பதால் சவப்பெட்டி மீது வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அதில், மன்னர் சார்லஸ் த “அன்பான மற்றும் அர்ப்பணிப்பு உள்ள நினைவுடன் சார்லஸ் ஆர்” என தனது கைப்பட எழுதியிருந்தார். இறுதியாக ராணி எலிசபெத் உடல் அவரது கணவர் பிலிப்புக்கு அருகில் அடக்கல் செய்யப்பட்டது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மார்ச் 10ம் தேதி உத்தரபிரதேச மக்களுக்கு ஹோலி பண்டிகை; பிரதமர் நரேந்திர மோடி

Halley Karthik

சொத்து தகராறு: தந்தை தற்கொலை; தாய் அடித்துக் கொலை

Web Editor

கிருஷ்ண ஜெயந்தி – தலைவர்கள் வாழ்த்து

Web Editor