முக்கியச் செய்திகள் தமிழகம்

போதை பொருளை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

போதைபொருளை ஒழிக்க தன்னார்வலர் இயக்கங்களுடன் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

போதை இல்லா பாதை இயக்கம் சார்பில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க அக்டோபர் 2 ஆம் தேதி தமிழகம் தழுவிய போதை விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் சென்னையில் தொடங்க உள்ளது. அதற்கான போஸ்டரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், முதலமைச்சர் போதை பொருள் ஒழிப்பு குறித்து எடுத்த முயற்சிக்கு தன்னார்வலர் இயக்கங்களும் உடன் அனைவருடன் இணைந்து செயல்பட வேண்டும். போதையில் ஈடுபட்டவர்கள் உடன் இருப்பவர்கள் சொல்வதை கேட்டு விளையாட்டாக தான் ஆரம்பிக்கிறார்கள். போதைக்கு அடிமையாவது தான் அவமானம் அதை திருத்திக்கொள்ள மருத்துவரை அணுகுவது அவமானம் இல்லை. ஒரே நாளில் 40 லட்சம் குழந்தைகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர் என்று தெரிவித்தார்.

போதை பொருள் விற்றதற்காக பலர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் அதை சுற்றி நடக்கும் தவறுகளை சொல்ல சிற்பி திட்டம் மூலம் குழந்தை போலீஸ் போல செயல்படுவார்கள். இன்று இருக்கும் போதை பழக்கவழக்கங்கள் இன்னும் அதிகரிக்காமல் இருக்க முதலமைச்சர் எடுக்கும் முயற்சிக்கு இது போன்ற இயக்கங்களும் உடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பள்ளி ஒவ்வொரு வருடமும் தொடங்கும் போதும் விழிப்புணர்வு நிகழ்ச்சியோடு துவங்கும். தொலைக்காட்சிகளும் புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் அதற்கு நாங்களும் கலந்து கொள்வோம். சர்வதேச அளவிலும் குழந்தைகள் விளையாட ஊக்ககுவிக்கப்படுகிறது. கற்றல் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி எடுக்கிறோம் என்று தெரிவித்தார்.

பூரண மதுவிலக்கு திட்டத்தை அமல்படுத்தவில்லை என்ற கேள்விக்கு, அதை முதலமைச்சரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது!

Jeba Arul Robinson

விளம்பரங்களில் இதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா?

Sugitha KS

எஸ்டிபிஐ பிரமுகர் கொலையில் ஆர். எஸ்.எஸ்சை சேர்ந்த 2 பேர் கைது

EZHILARASAN D