பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் ஏன் வெற்றி பெறவேண்டும்?; அன்புமணி ராமதாஸ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை அன்புமணி ராமதாஸ் இன்று அறிமுகப்படுத்திவைத்தார். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் பாமகவின் 200 வேட்பாளர்களின் அறிமுக பொது கூட்டம் இன்று…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை அன்புமணி ராமதாஸ் இன்று அறிமுகப்படுத்திவைத்தார்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் பாமகவின் 200 வேட்பாளர்களின் அறிமுக பொது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு, அனைத்து வேட்பாளர்களை அன்புமணி ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த கூட்டத்தில் பேசிய அவர், “பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் ஏன் வெற்றி பெறவேண்டும்? சென்னை வாசிகள் அதை சிந்திக்க வேண்டும். சென்னைக்கு புதிய திட்டங்கள் வரவேண்டும். மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் திட்டங்களை மட்டுமே சொல்கின்றார்கள், அதை யாரும் செயல்படுத்தவில்லை. 55 ஆண்டு காலமாக திமுக மற்றும் அண்ணா திமுக அரைத்த மாவையே அரைத்து வருகிறார்கள்.

இரண்டு கட்சிகளும் சிங்கார சென்னை, எழில்மிகு சென்னை என்று கூறி வருகிறார்கள் ஆனால் அதில் என்ன செய்தார்கள் என யாருக்கும் தெரியவில்லை. ஆக்கபூர்வமான சிந்தனைகள், விஞஞானபூர்வமாக சிந்தனைகளை வெளியிடும் ஒரே கட்சி தமிழகத்தில் பாமக மட்டுமே.

7 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னோம் சென்னையில் வெள்ளம் வரும் என்று. இப்போது பார்ப்பது எல்லாம் வெறும் டிரெய்லர்தான், மெயின் பிட்சர் இனிமேல்தான் தெரியும். சென்னையில் இதுவரை காணாத வெள்ளம் வரும். அதனால்தான் கேட்கிறேன் எங்களுக்கு வாக்களியுங்கள். சென்னையின் மேயராக பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினருக்கு வாய்ப்பு கொடுங்கள்.

8,000 நவீன பேருந்துகள் சென்னைக்கு விட வேண்டும், எலக்ட்ரிக் பேருந்துகள் அடங்கிய அந்த பேருந்துகளை இலவசமாக விடவேண்டும். இதனை செய்தால் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும், வாகன விபத்துகள் தவிர்க்கப்படும்.

ஜப்பானில் ஒரு டிக்கட்டை வைத்துக்கொண்டு எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். அந்த நிலை சென்னைக்கு வேண்டுமா?, அதனை நாங்கள் வந்தால் செய்கிறோம்” என்று பேசினார்.

தொடர்ந்து, “சென்னையின் மக்கள் தொகை 1 கோடியே 10 லட்சம் பேர். உலகத்தில் இருக்கிற நாடுகளை மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கிற போது, சென்னை மட்டும் ஒரு நாடாக இருந்திருந்தால் இன்று சென்னை உலக அளவில் 85 வது நாடாக இருந்திருக்கும்.

மாம்பலதிற்கு நீங்கள் வாக்களித்தால் உங்கள் தலையெழுத்தை நீங்கள் மாற்றலாம். சென்னையில் உள்ள மொத்த எரிகளில் உள்ள தண்ணீர் 11 டி எம் சி. சென்னைக்கு மாதாமாதம் தேவைப்படும் தண்ணீர் 1.5 டிஎம்சி. சென்னையின் கோயம்பேடு பேருந்து நிலையம், நேரு ஸ்டேடியம் உள்ளிட்டவை ஏரிகளை மூடி கட்டப்பட்டவை.

சென்னைக்கு வெளியே 100 கிலோ மீட்டர் தொலைவில் 10 புதிய ஏரிகளை உருவாக்க வேண்டும். நீர்ப்பாசன திட்டத்திற்காக மற்ற மாநிலங்களில் பல ஆயிரம் கோடி ரூபாயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழகத்திற்கு வெறும் 700 கோடிதான் அதையும் பயன்படுத்தாமல் வைத்து கொண்டு இருக்கிறார்கள்.

திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தமிழகத்திலுள்ள ஆறுகளை சாக்கடையாக்கி விட்டார்கள். எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள், நாங்கள் அதனை சுத்தப்படுத்தி காட்டுகிறோம். இந்தியாவிலே அதிக தூசி மாசுபாடு உள்ள நகரம் சென்னை. அதனால் மீண்டும் சைக்கிள் பயணத்தை பயன்படுத்த வேண்டிய நிலை சென்னைக்கு வர வேண்டும். சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள வழித்தடத்தை சென்னையில் உருவாக்க வேண்டும். இந்தியாவிற்கே சுகாதாரம் கொடுத்த எங்களுக்கு சென்னைக்கு சுகாதாரம் கொடுத்த முடியாதா? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வு குறித்த விவாதத்திற்கு என்னையும் அழையுங்கள் நானும் வருகிறேன். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் பிஜேபி திமுக மற்றும் அதிமுக. டாஸ்மாக் கடை குறித்து பொது விவாதம் நடத்த இரு கட்சிகளும் தயாரா? ஆனால் நான் தயார்.

நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த வரை நீட் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த நேரத்தில் நீட் தேர்வு வருவதற்கு காரணம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் திமுகதான். நீட் தேர்வை கண்டிப்பாக தடை செய்யவேண்டும். தரமான மருத்துவர்கள் வேண்டும் என்று சொல்லிதான் நீட் தேர்வு கொண்டு வந்துள்ளார்கள்.

இந்தியா முழுதும் நீட் தேர்வை மையப்படுத்தி 1 லட்சம் கோடி வணிகம் நடந்து கொண்டு இருக்கிறது. நீட் இல்லாத நேரத்தில் 12 ஆம் வகுப்பில் 60 சதவிகித தேர்ச்சி இருந்தால் மட்டுமே அவர் மருத்துவர். ஆனால் நீட் வந்த பிறகு 30 சதவிகிதம் மதிப்பெண் தேர்ச்சி பெற்றாலே அவர் மருத்துவர். எதன் அடிப்படையில் மருத்துவர்களுக்கு உண்டான மதிப்பு தீர்மானிக்க படுகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து மதுவிலக்கு குறித்து பேசத்தொடங்கிய அவர், “எங்களின் நோக்கம் தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும். இதை எங்கள் மருத்துவர் அய்யா 42 ஆண்டு காலமாக போராட்டம் நடத்தி வலியுறுத்தி வருகிறார். இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வழக்கு தொடர்ந்து மூடினோம்.

2016 தேர்தலில் முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்று நான் சொன்னேன். ஆனால் அதே நேரத்தில் ஸ்டாலினும் அதனை சொன்னார். இப்போது என்ன ஆனது? இன்னும் மூடபடவில்லை.

திமுக, அதிமுக அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே செய்வானே தவிர உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை செய்ய மாட்டார்கள்” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.