முக்கியச் செய்திகள் இந்தியா

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதற்கான காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

  • அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேரும் 4-ல் ஒருவருக்கு மட்டுமே வேலைக்கான உத்தரவாதம் உள்ளதாக கூறப்படுகிறது.  இதன்காரணமாக ராணுவத்தில் பயிற்சி பெறும் 4 ஆண்டுகளுக்குப் பின் 75% இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
  • அக்னிபாத் திட்டத்தில் இணையும் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் காரணமாக ராணுவப் பணி தற்காலிக பணியாக மாறிவிடும் எனும் அச்சம் எழுந்துள்ளது.

  • ராணுவத்தில் வீரர்கள், ஓட்டுநர்கள் போன்ற கீழ்நிலைப் பணிகளுக்கு மட்டுமே ஆள்சேர்க்கப்படுவார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  • இதன்காரணமாக ராணுவத்தில் ஒரு தரப்பினருக்கு மட்டுமே உயர் பதவிகளுக்கான வாய்ப்பு கிடைக்கும் என அச்சம் எழுந்துள்ளது.
  • இதனால் ராணுவத்தில் சமூக படிநிலை தகர்ந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
  • 4 ஆண்டு காலம் எனும் குறுகிய பயிற்சியால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளதாக பலர் விமர்சித்து வருகின்றனர்.
  • மேலும், ராணுவ பயிற்சி பெற்று வேலையில்லாமல் இருப்பவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
  • இத்தகைய அம்சங்களை கொண்டுள்ள அக்னிபாத் திட்டத்தின் காரணமாக ராணுவத்தின் செயல்பாட்டுத் திறன் குறைந்துவிடும் என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதற்கான திட்டம் இல்லை- மத்திய அரசு!

Jayapriya

சொதப்பிய ஹைதராபாத்; கொல்கத்தா அணிக்கு 116 ரன்கள் இலக்கு

Halley Karthik

ஆபத்தான பயணம் ; நூலிழையில் உயிர் தப்பிய மாணவன்

Sugitha KS