முக்கியச் செய்திகள் இந்தியா

பெகாசஸ் விவகாரத்தை ஏன் அவையில் விவாதிக்கக் கூடாது? ராகுல் காந்தி கேள்வி

பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது முதலே இந்த விவகாரத்தை எழுப்பி, அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாடளுமன்றம் முடங்கியுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி உட்பட 14 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, ராகுல் காந்தி கூறியதாவது:

இந்தியாவின் ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக, பெகாசஸ் என்ற ஆயுதம் ஏன் பயன்படுத்தப்பட்டது என்று நரேந்திர மோடியிடமும் அமித்ஷாவிடம் நாங்கள் கேட்க விரும்புகிறோம். இந்திய அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கியதா, இல்லையா என்ற ஒரே கேள்வியை கேட்க விரும்புகிறோம். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாது என்று தெளிவாக எங்களுக்கு கூறப்பட்டுள்ளது.

இந்த ஆயுதம் எனக்கு எதிராகவும் பல தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட பலருக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை ஏன் அவையில் விவாதிக்கக் கூடாது? நாங்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொந்தரவு செய்யவில்லை. நாங்கள் எங்கள் கடமைகளை நிறைவேற்ற விரும்புகிறோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டம் இன்று தொடங்கியது!

Gayathri Venkatesan

கணவருடன் தகராறு: இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி

Vandhana

கடந்த 3 ஆண்டுகளில் 630 தீவிரவாதிகள் கொலை

Halley Karthik