கொரோனா முடியும் வரை 75% கட்டணம்தான் வசூலிக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி

  கொரோனா சூழல் முடியும் வரை 75 சதவீத கல்விக்கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

 

கொரோனா சூழல் முடியும் வரை 75 சதவீத கல்விக்கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் இருப்பது போல் பிற கல்லூரிகளிலும் மதிப்பீடு முறையை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

நேற்று வரை ஒற்றைச்சாளர முறையில் 41 ஆயிரத்து 363 மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் கூறினார். மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 102 இடங்கள் உள்ள நிலையில் ஒரு லட்சத்து 26 அயிரத்து 748 பேர் விணப்பித்துள்ளனர் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டின் அரியர் தேர்வுகளை மொத்தமாக எழுதுவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.